Friday, 17 November 2017

Significance of Mandala Vratham



Each of the avatars and deities in our spiritual tradition has its own significance and purpose. Every procedure and worship method has a reason. Sometimes we do not understand them - and we are the losers.
Our past life (previous birth and current one) determine our present. Whatever we encounter today (joy, happiness and sorrow) were determined by our past actions. Nothing is given to us just like that without a reason. And this is called karma which is defined as ‘action and consequence.’
Ok, what does the above mentioned things got to do with the worship of Lord Ayyappan?
Whenever we go through our present ordeal or a difficult situation, frustration creeps in to an extent that we want to desperately get through this fast. Worship of Lord Ayyappan is a method where we deliberately, whole heartedly follow a difficult way of life to pacify our karma - to nullify our past bad deeds. It is a way of worship where we accept and follow the punishment (even though it sounds hard). We choose this way, follow a self-imposed difficult life, repent, get disciplined and freed for a bright and future life.
This is the basis of worship of Lord Ayyappan. With the guidance and blessings of a guru, a devotee wears a garland as a token of acceptance, reduce the food, starve, avoid non vegetarian foods, liquor and follow bramacharya till returning from Sabari mala. What more? Even footwear is prohibited. The devotee almost leads a life of a beggar - starving, without proper hair style or grooming, treating the young and old alike by addressing 'swamy'. This is the beauty of this worship method. It cleanses our karma. It culminates at the darshan of Lord Ayyappan at the Sabarimala.
The process of Ghee Abishekam has its own significance. Coconut is a metaphor for our body. The shell is the bone. fibres are nerves. Edible white coconut forms the muscles and water is our blood. We fill the coconut with ghee. It is a symbol of our aatma. Ghee is processed from milk. It goes through various stages. We cannot see ghee directly in the milk. But ultimately milk turns into ghee. Finally ghee which is our aatma, reaches god as abishekam. The coconut which carried the body is destroyed in the fire of
homagundam. No other worship method makes us understand this fundamental purpose of life in an easy way.
And finally, this method of worship is not just for cleansing our karma but also instill discipline in our life for the future. Washing off our Karmic past and following a discipline righteous life will automatically bring prosperity.
We have collected important slokas pertaining to Lord Ayyappan, as far as possible and have given it in text and audio formats. Text is available in both English and Tamil. 



You can download the app here >>


https://play.google.com/store/apps/details?id=com.myappbuffet.SriSastha


Swamiye Saranam Ayyappa

Thursday, 16 November 2017

ஐயப்பன் விரதம் ஏன்?



ஒவ்வொரு இறை அவதாரமும் வடிவமும் அவற்றின் பின்னணியும் கூர்ந்து கவனிக்கபட வேண்டியவை. எல்லாவற்றிற்கும் காரண காரியம் உண்டு. சிலசமயங்களில் நமக்கு புரியாமல் போவதால் அவற்றின் மகிமை தெரியாமல் போவது ஒரு பக்கம் இருந்தாலும் அவற்றின் காரணங்களும் அந்த வழிபாட்டு முறையின் சிறப்புகளும், அவற்றின் அவசியமும் நாம் அறியாமல் வாழ்வது நமக்கு தான் இழப்பு.

நம் இறந்த கால வாழ்க்கையில்  (முன் பிறப்பும், இந்த பிறப்பும் உட்பட) நாம் செய்த அணைத்து செயல்களுக்கும் ஏற்றவாறு நமது நிகழ்காலம் அமைகிறது. சுருக்கமாக சொன்னால், இன்று நாம் அனுபவிக்கும் துன்பத்திற்கும் இன்பத்திற்கும் அதுவே காரணம். தீதும் நன்றும் பிறர் தர வாரா! இதை நம் முன்னோர்கள் அழகாக ஒரே வார்த்தையில் கர்மா என்று குறிப்பிடுகின்றனர்.

சரி, ஐயப்பன் வழிபாட்டிற்கும் மேலே சொன்ன விஷயத்திற்கும் என்ன சம்மந்தம்?
நம் கர்மவினையின் சுழற்சியில் மாட்டிக்கொண்டு அல்லல் படும்போது சில சமயங்களில் இந்த வலியும் வேதனையும் துரிதமாக முடிந்து விட்டால் நிம்மதி என்று நமக்கு தோன்றும். தண்டனையை நாமே தேடி அனுபவித்து, மனதார நம் கர்மங்களுக்கான எதிர் வினையை நாமே அனுபவித்து, விடுதலையும், ஞானமும், ஒழுக்கமாக வாழ வழிகாட்டலும் பெற்று வாழ சிறந்த மார்க்கமே ஐயப்பன் வழிபாடு.

இந்த பின்னணியில் தான் ஐயப்பன் வழிபாட்டு முறைகள் அமைந்துள்ளன. இந்த பாதையை தேர்ந்தெடுத்ததற்கு அடையாளமாக, குருவின் கருணையோடும், வழிகாட்டுதலுடனும் மாலை அனிந்து, உணவை குறைத்து, புலால் உணவு நீக்கி, கள்ளுண்ணாமை பின்பற்றி, விரதம் முடியும் வரை பிரம்மச்சர்யம் கடைபிடித்து, போதை வஸ்துக்களை தவிர்த்து - எல்லாம் நம் கண் முன்னே இருந்தும் ஒழுக்கமாக வாழும் கலை. அவ்வளவு ஏன்? காலில் செருப்பு அணியாமல், சிகை அல்லங்காரம் கூட இல்லாமல், கருப்பு உடை அணிந்து, வயது வித்யாசம் பாராமல் அனைவரையும் மரியாதையுடன் 'சாமி' என அழைத்து, அரை பட்டினியில் ஒரு பிச்சைக்காரனை போல் வாழ்ந்து நம் கர்ம வினையை தீர்க்கும் ஒரே அற்புத மார்க்கம. விரதம் முடிக்க காடு மலை தாண்டி நடந்து சபரி மலை சென்று ஐயனை தரிசித்து வாழ்க்கையில் மீள்வதே நோக்கம்.

முத்தாய்ப்பாக - நெய் தேங்காய் என்ற ஒரு விஷயம். தேங்காயில் உள்ள ஓடே நம் எலும்புகள், நார் நமது நரம்புகள், வெள்ளை தேங்காய் நம் தசை, நீர் நமது குருதி. நாம் திருந்தி தெளிந்ததற்கு அடையாளமாக நெய். பாலிலிருந்து, தயிராகி பின் நெய்யாக மாறுவது நம் ஆத்ம தரிசனம். பாலில் நேரடியாக நெய் தெரியாது. பல கட்டங்களுக்கு பிறகு திரிந்து மாறி நெய்யாகிறது என்பதே தத்துவம். அந்த நெய்யும் இறுதியாக இறைவன் மீது அபிஷேகமாகிறது. நம் ஜீவாத்மா இறைவனை அடைவதே இந்த தத்துவம். அனால் சுமந்து சென்ற தேங்காய் கோவில் வாசலில் ஓமகுண்டத்தில் தீக்கிரையாகிறது. அது நம் உடலின் நிலையாமையை உணர்த்துவது.

இறுதியாக, இந்த வழிபாட்டு முறை கர்ம வினையை கழுவுவதற்கு மட்டும் அல்ல. வருங்காலத்தில் ஒழுக்கமாக வாழவும் ஒரு பயிற்சியே. கர்ம வினை தீர தீர, ஒழுக்கம் மேலோங்க சுபீட்சமான வாழ்க்கை கிட்டும். இதுவே சிறந்த தவமாகும்.


ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

ஐயப்பன் வழிபாட்டில் உள்ள முக்கிய ஸ்லோகங்களை எடுத்து தொகுத்து வழங்கியுள்ளோம். கேட்கவும் படிக்கவும் ஏதுவாக அமைத்துள்ளோம்.

DOWNLOAD THE APP HERE






Sunday, 22 October 2017

Panchami thithi - Oct 2017

https://play.google.com/store/apps/details?id=com.myappbuffet.srivarahi


ஶ்ரீவாராஹிஅம்மனுக்கு உகந்த விஷேச நாள்!
அனனவரும் அன்னையை வணங்கி அருள் பெருக!


ஸ்ரீ வாராஹி அஷ்டகம் 
ஸ்ரீ வாராஹி ஸ்தோத்ரம் 
ஸ்ரீ வாராஹ்யனுகிரஹாஷ்டகம்
ஸ்ரீ வாராஹி பன்னிரு நாமங்கள் 
ஸ்ரீ வாராஹி சஹஸ்ரநாமம் 
ஸ்ரீ மஹா வாராஹி மந்திரம் 
ஸ்ரீ வாராஹி கவசம்
ஸ்ரீ வாராஹி மாலை
ஸ்ரீ வாராஹி 108 போற்றி 
ஸ்ரீ வாராஹி சித்தி அர்ச்சனை 

Monday, 9 October 2017

கோபுர தரிசனம் - திருவண்ணாமலை

தேய்பிறைஅஷ்டமி -12-10-2017



ஶ்ரீ காலபைரவரக்கு உகந்த விஷேச நாள்!
12-10-2017 (வியாழன்)
வணங்கி அருள் பெறுக !
 
 சொல்ல வேண்டிய முக்கிய ஸ்லோகங்கள் 

ஸ்ரீ பைரவ தியானம்
ஸ்ரீ கால பைரவாஷ்டகம்
ஸ்ரீ கால பைரவ அஷ்டோத்ர சத நாமாவளி
ஸ்ரீ கால பைரவர் 108 போற்றி
ஸ்ரீ கால பைரவ சஹஸ்ர நாமாவளி
ஸ்ரீ பைரவர் காயத்ரீ
வைரவர் பதிகம்

ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர்  


ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் காயத்ரீ
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம்
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவ அர்ச்சனை
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூல மந்திரம்
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் பன்னிரு நாமாக்கள்



இவை அனைத்தும் கேட்கவும் படிக்கவும், 
Download the FREE app here

Friday, 22 September 2017

Panchami thithi 25th Sep 2017 - Sri Varahi

https://play.google.com/store/apps/details?id=com.myappbuffet.srivarahi



அன்னை ஸ்ரீ வாராஹி  அம்மன் ஸ்லோகங்கள் மற்றும் மந்திரங்கள்

ஸ்ரீ வாராஹி அஷ்டகம்
ஸ்ரீ வாராஹி ஸ்தோத்ரம்
ஸ்ரீ வாராஹ்யனுகிரஹாஷ்டகம்
ஸ்ரீ வாராஹி பன்னிரு நாமங்கள்
ஸ்ரீ வாராஹி சஹஸ்ரநாமம்
ஸ்ரீ மஹா வாராஹி மந்திரம்
ஸ்ரீ வாராஹி கவசம்
ஸ்ரீ வாராஹி மாலை
ஸ்ரீ வாராஹி 108 போற்றி
ஸ்ரீ வாராஹி சித்தி அர்ச்சனை



கேட்கவும் படிக்கவும் - Download the FREE APP here






Thursday, 21 September 2017

நவராத்ரி வாழ்த்துக்கள்

https://play.google.com/store/apps/details?id=com.myappbuffet.SriDurga

ஸ்ரீ துா்கை அம்மன் போற்றி (108)

ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் ஆதிபராசக்தியே  போற்றி
ஓம் அபிராமியே  போற்றி
ஓம் ஆயிரங்கண்கள் உடையவளே போற்றி
ஓம் அம்பிகையே  போற்றி
ஓம் ஆசைகளை அறுப்பாய் போற்றி
ஓம் அன்பின் உருவே போற்றி
ஓம் ஆபத்தைத் தடுப்பாய்  போற்றி
ஓம் அச்சம் தீா்ப்பாய்  போற்றி
ஓம் ஆனந்தம் அளிப்பாய்  போற்றி                                        10
ஓம் அல்லல் தீா்ப்பாய்  போற்றி         
ஓம் ஆற்றல் தருவாய் போற்றி 
ஓம் இமய வல்லியே  போற்றி 
ஓம் இல்லறம் காப்பாய்  போற்றி 
ஓம் இரு சுடா் ஒளியே  போற்றி 
ஓம் இருளை நீக்குவாய்  போற்றி 
ஓம் ஈசனின் பாதியே  போற்றி 
ஓம் ஈஸ்வாியே  போற்றி 
ஓம் உமையவளே  போற்றி 
ஓம் உலகத்தை காத்திடுவாய்  போற்றி                               20
ஓம் உள்ளவரம் தீா்ப்பாய்  போற்றி
ஓம் உற்சாகம் அளிப்பாய்  போற்றி 
ஓம் ஊழ்வினை  தீா்ப்பாய்  போற்றி
ஓம் ஊக்கம் அளிப்பாய் போற்றி
ஓம் என் துணை இருப்பாய்  போற்றி
ஓம் ஏக்கம் தீா்ப்பாய்  போற்றி
ஓம் எம்பிராட்டியே  போற்றி
ஓம் ஏற்றம் அளிப்பாய்  போற்றி
ஓம் ஐமுகன் துணையே  போற்றி                                          30
ஓம் ஒளிா்வு முகத்தவளே  போற்றி
ஓம் ஓச்சம் அளிப்பாய்  போற்றி
ஓம் கங்காணியே  போற்றி
ஓம் காமாட்சியே  போற்றி
ஓம் கடாட்சம் அளிப்பாய்  போற்றி
ஓம் காவல் தெய்வமே  போற்றி
ஓம் கருணை ஊற்றே  போற்றி
ஓம் கற்பூர நாயகியே  போற்றி
ஓம் கற்பிற்கரசியே  போற்றி
ஓம் காமகலா ரூபிணியே  போற்றி                                      40  
ஓம் கிாிசையே  போற்றி
ஓம் கிலியைத் தீா்ப்பாய்  போற்றி
ஓம் கீா்த்தியைத் தருவாய்  போற்றி
ஓம் கூா்மதி தருவாய்  போற்றி
ஓம் குவலயம் ஆள்பவளே  போற்றி
ஓம் குலத்தைக் காப்பாய்  போற்றி
ஓம் குமரனின் தாயே  போற்றி
ஓம் குற்றம் பொறுப்பாய்  போற்றி
ஓம் கொற்றவையே  போற்றி
ஓம் கொடுந்துயா் தீா்ப்பாய்  போற்றி                                 50
ஓம் கோமதியே  போற்றி
ஓம் கோனாிவாகனம் கொண்டாய்  போற்றி
ஓம் சங்காியே  போற்றி
ஓம் சாமுண்டீஸ்வாியே  போற்றி
ஓம் சந்தோஷம் அளிப்பாய்  போற்றி
ஓம் சாந்த மனம் தருவாய்  போற்றி
ஓம் சக்தி வடிவே  போற்றி
ஓம் சாபம் களைவாய்  போற்றி
ஓம் சிம்ம வாகினியே  போற்றி 
ஓம் சீலம் தருவாய் போற்றி                                                  60
ஓம் சிறுநகை புாியவளே போற்றி
ஓம் சிக்கலைத் தீா்ப்பாய் போற்றி
ஓம் சுந்தர வடிவழகியே போற்றி
ஓம் சுபிட்சம் அளிப்பாய் போற்றி
ஓம் செங்கதிா் ஒளியே போற்றி
ஓம் சேவடி பணிகிறேன் போற்றி
ஓம் சோமியே போற்றி
ஓம் சோமியே போற்றி
ஓம் சோதனை தீா்ப்பாய் போற்றி
ஓம் தண்கதிா் முகத்தவளே போற்றி
ஓம் தாயே நீயே போற்றி                                                       70
ஓம் திருவருள் புாிபவளே போற்றி
ஓம் தீங்கினை ஒழிப்பாய் போற்றி
ஓம் திாிபுரசுந்தாியே போற்றி
ஓம் திாிசூலம் கொண்டாய் போற்றி
ஓம் திசையெட்டும் புகழ்கொண்டாய் போற்றி
ஓம் தீரம் அளிப்பாய் போற்றி
ஓம் துா்க்கையே அம்மையே போற்றி
ஓம் துன்பத்தை வேரறுப்பாய் போற்றி
ஓம் துணிவினைத் தருவாய் போற்றி
ஓம் தூயமனம் தருவாய் போற்றி                                     80
ஓம் நாரணியே போற்றி
ஓம் நலங்கள் அளிப்பாய் போற்றி
ஓம் நிந்தனை ஒழிப்பாய் போற்றி
ஓம் நீதியினைக் காப்பாய் போற்றி
ஓம் பகவதியே போற்றி
ஓம் பவானியே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாக்கியம் தருவாய் போற்றி
ஓம் பிரபஞ்சம் ஆள்பவளே போற்றி
ஓம் பிழை தீா்ப்பாய் போற்றி                                            90
ஓம் புகழினை அளிப்பாய் போற்றி
ஓம் பூஜிக்கிறேன் துா்க்கா போற்றி
ஓம் பொன்ஒளி முகத்தவளே போற்றி
ஓம் போா் மடத்தை அளிப்பாய் போற்றி
ஓம் மகிஷாசுரமா்த்தினியே போற்றி
ஓம் மாதங்கியே போற்றி
ஓம் மலைமகளே போற்றி
ஓம் மகமாயி தாயே போற்றி
ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி
ஓம் மாதவன் தங்கையே போற்றி                                 100
ஓம் மனக்குறை தீா்ப்பாய் போற்றி
ஓம் மண்ணுயிா் காப்பாய் போற்றி
ஓம் வேதவல்லியே போற்றி
ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் ஜெயஜெய தேவியே போற்றி
ஓம் ஜெயங்கள் அளிப்பாய் போற்றி
ஓம் துா்க்காதேவியே போற்றி
ஓம் போற்றி போற்றி போற்றியே                                   108



Download the app here with text and audio












Friday, 15 September 2017

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்

https://play.google.com/store/apps/details?id=com.myappbuffet.SriNarasimhar


ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் 

ஸ்ரீ விஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒருவர். மற்ற அவதாரங்களை போல் பிறந்து, வளர்ந்து பிறகு அவதார நோக்கமான அசுரனை அழிப்பது போல் அல்லாமல் அவதரித்த உடனே சட்டென்று ஹிரண்யனை வதம் செய்து ப்ரஹலாதனுக்கு  அருளியவர். அதே போல் தன்னை நம்பி தஞ்சம் அடைந்த பக்தர்களை உடனே, தாமதிக்காமல் காப்பாற்றி அருளும் கருணை உள்ளம் கொண்டவர்.

உயிர் உள்ள - உயிரற்ற  ஆயுதத்தால்
பகலும் இரவும் அல்லாத நேரத்தில்
அகமும் புறமும் அல்லாத இடத்தில்
மேலும் கீழும் அல்லாத நிலையில்
மனிதனும் மிருகமும் அல்லாத ஒருவரால் தான், தன் உயிர் போகவேண்டும் என்ற கடுமையான சிக்கலான வரத்தைப் பெற்ற ஹிரண்யனை, ஸ்ரீ விஷ்ணு -
உயிர் உள்ள - உயிரற்ற  ஆயுதத்தால் - தன் கூரிய நகங்களால்
பகலும் இரவும் அல்லாத நேரத்தில் - அந்திப் பொழுதில்
அகமும் புறமும் அல்லாத இடத்தில - வாசலில்
மேலும் கீழும் அல்லாத நிலையில் - தன் மடியில்
சிங்க தலையும் மனித உடலும் கொண்டு ஸ்ரீ நரசிம்மராய் அவதரித்து வதம் செய்தார். வாழ்க்கையில் எவ்வளவு சிக்கலான சூழலும், துன்பங்களும் நேர்ந்தாலும், தன்னை நம்பிய உண்மையான பக்தர்களை அவ்வாறே எளிதில் சட்டென்று சுலபமாக காப்பவர். ஹிரண்யனின் சிக்கலான வரத்தை விடவா நமது துன்பங்கள்? அதையே எளிதில் உடைத்தெறிந்து ப்ரஹலாதனுக்கு அருளிய ஐயன் அன்போடு நம்மையும் அவ்வாறே காப்பாற்றி வழி நடத்துவார். நம்பிக்கையும், உண்மையும், அன்பும் மட்டும் போதும். எந்த சூழலிலும் கைவிடாமல் காப்பார்.

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரின் முக்கியமான ஸ்லோகங்களையும், ஸ்தோத்திரங்களையும் தொகுத்து ஒலி மற்றும் எழுத்து வடிவில் வழங்கி உள்ளோம்.

ஸ்ரீ நரசிம்ம காயத்ரி

ஸ்ரீ நரசிம்ம கவசம்

கராவலம்ப ஸ்தோத்ரம்

ஸ்ரீ நரசிம்ம பிரபத்தி

ஶ்ரீமந்த்ரராஜபத ஸ்தோத்ரம்

ஸ்ரீ நரசிம்ம ருண விமோசன ஸ்தோத்திரம்

ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பஞ்சரத்ன ஸ்தோத்திரம்

ஸ்ரீ நரசிம்ம அஷ்டோத்ர சத நாமாவளி

ஸ்ரீ நரசிம்ம அஷ்டகம்

ஸ்ரீ நரசிம்ம ஸ்துதி

ஸ்ரீ நரசிம்ம நக ஸ்துதி

ஸ்ரீ நரசிம்ம அஷ்டோத்ர சத நாம ஸ்தோத்ரம்


Download the FREE app here
இங்கே பதிவிறக்கம் செய்யலாம்





Thursday, 14 September 2017

A bunch of devotional apps

https://play.google.com/store/apps/developer?id=App_buffet2017&hl=en


App Buffet offers a golden collection of devotional apps for your spiritual journey.
Each app is a collection of important slokas in text and audio formats.

Listen!
Read!
Worship!

Download the apps here

Tuesday, 12 September 2017

Flower Dome, Singapore


Flower Dome, located at the 'Gardens by the Bay' is a stunning world famous attraction in Singapore. A garden filled with serene beauty consisting of exotic flora. A place not to be missed in your list.

Monday, 11 September 2017

தேய்பிறைஅஷ்டமி -13-09-2017

https://play.google.com/store/apps/details?id=com.myappbuffet.SriBhairavar


ஶ்ரீ காலபைரவரக்கு உகந்த விஷேச நாள்!
13-09-2017 புதன்கிழமை அதிகாலை 02.07 முதல் இரவு 11.38 வரை!
வணங்கி அருள் பெறுக !
 
 சொல்ல வேண்டிய முக்கிய ஸ்லோகங்கள் 

ஸ்ரீ பைரவ தியானம்
ஸ்ரீ கால பைரவாஷ்டகம்
ஸ்ரீ கால பைரவ அஷ்டோத்ர சத நாமாவளி
ஸ்ரீ கால பைரவர் 108 போற்றி
ஸ்ரீ கால பைரவ சஹஸ்ர நாமாவளி
ஸ்ரீ பைரவர் காயத்ரீ
வைரவர் பதிகம்

ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர்  


ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் காயத்ரீ
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம்
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவ அர்ச்சனை
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூல மந்திரம்
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் பன்னிரு நாமாக்கள்



இவை அனைத்தும் கேட்கவும் படிக்கவும், 
Download the FREE app here







Sunday, 10 September 2017

ஸ்ரீ துர்கா கவசம்

https://play.google.com/store/apps/details?id=com.myappbuffet.SriDurga


ச்ருணு தேவி ப்ரவக்ஷ்யாமி கவசம் ஸா்வஸித்திதம் |
படித்வா பாடயித்வா ச நரோ முச்யேத ஸங்கடாத் ||                           1

அஜ்ஞாத்வா கவசம் தேவிதுா்காமந்த்ரம் ச யோஜபேத் |
ஸ நாப்நோதி பலம் தஸ்ய பரஞ்ச நரகம் வ்ரஜேத் ||                             2

உமாதேவீ சிர: பாது லலாடே சூல தாாிணீ |
சக்ஷுஷீ கேசரீ பாது கா்ணெள சத்வர வாஸிநீ ||                                   3

ஸுகந்தா நாஸிகே பாது வதநம் ஸா்வதாாிணீ |
ஜிஹ்வாஞ்ச சண்டிகா தேவீ க்ரீவாம் ஸெளபத்ரிகா ததா ||              4

அசோக வாஸிநீ சேதோத்வெள பாஹூ வஜ்ரதாாிணீ |
ஹ்ருதயம் லலிதா தேவீ உதரம் ஸிம்ஹவாஹிநீ ||                                5

கடிம் பகவதீ தேவீ த்வாவூரூ விந்த்யவாஸிநீ |
மஹாபலாச ஜங்கே த்வே பாதெள பூதலவாஸிநீ ||                                6

ஏவம் ஸ்திதாஸி தேவி த்வம்
த்ரைலோக்யே ரக்ஷணாத்மிகா |
ரக்ஷ மாம் ஸா்வகாத்ரேஷு துா்கே தேவி நமோஸ்துதே ||                    7


Audio and text available in the free app which can be downloaded here

Friday, 8 September 2017

பஞ்சமி திதி September - 10-09-2017

https://play.google.com/store/apps/details?id=com.myappbuffet.srivarahi

ஶ்ரீவாராஹிஅம்மனுக்கு உகந்த விஷேச நாள்!
அனனவரும் அன்னையை வணங்கி அருள் பெருக!


ஸ்ரீ வாராஹி அஷ்டகம் 
ஸ்ரீ வாராஹி ஸ்தோத்ரம் 
ஸ்ரீ வாராஹ்யனுகிரஹாஷ்டகம்
ஸ்ரீ வாராஹி பன்னிரு நாமங்கள் 
ஸ்ரீ வாராஹி சஹஸ்ரநாமம் 
ஸ்ரீ மஹா வாராஹி மந்திரம் 
ஸ்ரீ வாராஹி கவசம்
ஸ்ரீ வாராஹி மாலை
ஸ்ரீ வாராஹி 108 போற்றி 
ஸ்ரீ வாராஹி சித்தி அர்ச்சனை 

Thursday, 24 August 2017

பஞ்சமி திதி - 26-08-2017

https://play.google.com/store/apps/details?id=com.myappbuffet.srivarahi


ஶ்ரீவாராஹிஅம்மனுக்கு உகந்த விஷேச நாள்!
அனனவரும் அன்னையை வணங்கி அருள் பெருக!

ஸ்ரீ வாராஹி அஷ்டகம் 
ஸ்ரீ வாராஹி ஸ்தோத்ரம் 
ஸ்ரீ வாராஹ்யனுகிரஹாஷ்டகம்
ஸ்ரீ வாராஹி பன்னிரு நாமங்கள் 
ஸ்ரீ வாராஹி சஹஸ்ரநாமம் 
ஸ்ரீ மஹா வாராஹி மந்திரம் 
ஸ்ரீ வாராஹி கவசம்
ஸ்ரீ வாராஹி மாலை
ஸ்ரீ வாராஹி 108 போற்றி 
ஸ்ரீ வாராஹி சித்தி அர்ச்சனை

 இந்த ஸ்லோகங்களை படிக்கவும் கேட்கவும், Download the app here



Saturday, 19 August 2017

ஸ்ரீ ப்ரத்யங்கிரா

https://play.google.com/store/apps/details?id=com.myappbuffet.srisarabaeswarar&hl=en


ஸ்ரீ ப்ரத்யங்கிரா கவசம்
ஸ்ரீ ப்ரத்யங்கிரா அஷ்டோத்ரம்
ஸ்ரீ ப்ரத்யங்கிரா மந்திரம்
ஸ்ரீ சூலினி அஷ்டோத்ரம்
ஸ்ரீ சூலினி மந்திரம்

ஸ்ரீ சரபேஸ்வரர் தியான ஸ்லோகம்
ஸ்ரீ சரப காயத்ரீ
ஸ்ரீ சரபரின் மூல மந்திரம்
ஸ்ரீ சரபேஸ்வர சஹஸ்ர நாமாவளி
ஸ்ரீ சரப மூர்த்தி 108 போற்றி
ஸ்ரீ சரப கவசம்
ஸ்ரீ சரபாஷ்டகம்


Download the app here

Thursday, 17 August 2017

Sri Durga

https://play.google.com/store/apps/details?id=com.myappbuffet.SriDurga


Sri Durga is another name for Sri Shakthi. If it is Shivarathiri - (one night) for Lord Shiva, it is Navarathiri (Nine nights) celebration for Sri Shakthi. The first 3 nights of Navarathiri is dedicated to Sri Durga matha. Mother Sree Durga eliminated the devil Mahishasuran and saved the world. She fought a battle and won it to save us. The metaphor is simple and straightforward.  She will win the battle of life for us. She will eliminate our sorrows. She will be with us. All we have to ensure is to do our duty honestly and have faith in her. She will take care of the rest. We have collected slokas and mantras pertaining to Sree Durga matha and have offered it in both text and audio formats. The text is offered in both English and Tamil languages for the convenience of the devotees.

Jai Sree Durga Devi!

List of slokas

Sri Durga Gayathri
Sri Durga Kavacham
Sri Durga Pancharathnam
Dhukka Nivarana Ashtakam
Rahu Kaala Durga Ashtakam
Sri Durga Roha Nivarana Ashtakam
Sri Durga 108 Potri
Sri Mangala Chandika Stothram
Jeya Jeya Devi Durga Devi
Sri Durga Chandrakala stuthi
Sri Durga Sapthachlogee
Sri Durga Sahasranama Stothram
Sru Durga Ashtothra Satha Naamavalli


Click here to download the app

Monday, 14 August 2017

ஸ்ரீ ஹனுமான் ஸ்லோகங்கள்

https://play.google.com/store/apps/details?id=com.myappbuffet.SriHanumaan


    ஸ்ரீ ராம தியானம்
    ஸ்ரீ ஆஞ்சநேயர் காயத்ரி
    ஸ்ரீ ஆஞ்சநேயர் 108 போற்றி
    ஸ்ரீ ஆஞ்சநேயர் மூலமந்திரம்
    ஸ்ரீ ராமா ஆஞ்சநேயர் ஸ்லோகம்
    சீதாராம ஸ்தோத்ரம்
    ஸ்ரீ ஹனுமத் பஞ்சரத்னம்
    ஸ்ரீ ஹனுமான் மங்களாஷ்டகம்
    ஸ்ரீ ஹனுமான் அஷ்தோத்திரம்
    ஸ்ரீ ஹனுமான் புகழ் மலை
    ஸ்ரீ ஹனுமான் சாலிசா
    ஸ்ரீ ஆஞ்சநேயரிடம் விண்ணப்பம்

Download link

ஸ்ரீ துர்கா

https://play.google.com/store/apps/details?id=com.myappbuffet.SriDurga

சக்தியின் மறு பெயர் ஸ்ரீ துர்கா தேவி! சிவனுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி என்றால் அம்பிகைக்கு ஒன்பது ராத்திரி - அது தான் நவராத்திரி. அதில் முதல் மூன்று நாட்கள் ஸ்ரீ துர்க்கைக்கு உரிய சிறப்பான நாட்கள். ஸ்ரீ துர்கா தேவி மகிஷாசுரனை வதம் செய்து நமக்கு அருள் புரிபவள்.  நமக்கு துக்கத்திலிருந்து விடுதலை தருபவள். துக்க நிவாரணி! மகிஷனை போரில் வென்றது போல் நாமும் வாழ்க்கை போராட்டத்தில் வெல்ல நமக்கு துணையாய் வருபவள். அம்பிகையை நம்பிக்கையோடு வணங்கி நேர்மையாக உழைத்தால் போதும் மற்றவை அவள் பார்த்துக் கொள்வாள். ஸ்ரீ துர்கையின் ஸ்லோகங்களையும் மந்திரங்களையும் இயன்றவரை தொகுத்து ஒலி மற்றும் எழுத்து வடிவில் வழங்கி உள்ளோம். எளிதில் பெரும்பாலானோர் புரிந்துகொள்வதற்கு ஏற்ப தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஸ்லோகங்களை வழங்கி உள்ளோம். இது பக்தர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகின்றோம்.

எங்களின் பிற வெளியீடுகளான ஸ்ரீ வாராஹி, ஸ்ரீ பைரவர், ஸ்ரீ சரபேஸ்வரர், ஸ்ரீ ஹனுமான் போன்றவை பக்தர்களிடையே பெரிய வரவேற்பு பெற்றது எங்களுக்கு மகிழ்ச்சியை மட்டுமல்லாது உற்சாகத்தையும் அளிக்கிறது. இது இறைவனின் கருணை. அந்த கருணையினால் இந்த பணி தொடர்கிறது - அதன் விளைவே ஸ்ரீ துர்கா!


ஸ்ரீ துர்கா காயத்ரீ
ஸ்ரீ துர்கா கவசம்
ஸ்ரீ துர்கா பஞ்சரத்னம்
துக்க நிவாரண அஷ்டகம்
ராகு கால துர்கா அஷ்டகம்
ஸ்ரீ துர்கா ரோக நிவாரண அஷ்டகம்
ஸ்ரீ துர்கை அம்மன் 108 போற்றி
ஸ்ரீ மங்கள சண்டிகா ஸ்தோத்ரம்
ஜெய ஜெய தேவி துர்கா தேவி
ஸ்ரீ துர்கா சந்திரகலா ஸ்துதி
ஸ்ரீ துர்கா சப்தச்லோகீ
ஸ்ரீ துர்கா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்
ஸ்ரீ துர்கா அஷ்டோத்ர சத நாமாவளி

ஓம் ஸ்ரீ துர்கா தேவி போற்றி! 




Friday, 11 August 2017

ஶ்ரீவாராஹி - பஞ்சமி திதி - 12-08-2017

https://play.google.com/store/apps/details?id=com.myappbuffet.srivarahi&hl=en


அன்னன ஶ்ரீவாராஹி அம்மன்க்கு உகந்த விஷேச நாள்
பஞ்சமி திதி - 12-08-2017 சனிக்கிழமை (இரவு 10.06 வரை)

முக்கியமான ஸ்லோகங்கள் 

ஸ்ரீ வாராஹி அஷ்டகம் 
ஸ்ரீ வாராஹி ஸ்தோத்ரம் 
ஸ்ரீ வாராஹ்யனுகிரஹாஷ்டகம்
ஸ்ரீ வாராஹி பன்னிரு நாமங்கள் 
ஸ்ரீ வாராஹி சஹஸ்ரநாமம் 
ஸ்ரீ மஹா வாராஹி மந்திரம் 
ஸ்ரீ வாராஹி கவசம்
ஸ்ரீ வாராஹி மாலை
ஸ்ரீ வாராஹி 108 போற்றி 
ஸ்ரீ வாராஹி சித்தி அர்ச்சனை

 இந்த ஸ்லோகங்களை படிக்கவும் கேட்கவும், Download the app here






ஸ்ரீ ஆஞ்சநேயரிடம் விண்ணப்பம்

https://play.google.com/store/apps/details?id=com.myappbuffet.SriHanumaan


அஞ்சனை வயிற்றில் தோன்றிய முத்தே
அகில உலகுக்கும் பக்திக்கு வித்தே
ஸ்ரீராமர் புகழ் உணா்ந்த ஞானி நீயே
என் ராம பக்தி வளர ஏணி நீயே
மலைகளை தூக்கும் ஆற்றல் இருந்தும்
விண்ணை அளக்கும் உருவம் இருந்தும்
ஸ்ரீராமர் முன்னால் நீ குறுகி நிற்கிறாய்
ஸ்ரீராமரின் அன்பால் நீ உருகி நிற்கிறாய்
சொல்லிலும் செயலிலும் உனக்கிணை உண்டோ
ஆகாயத்தை விடவும் அகன்றது  உண்டோ
உன் புகழ் யாவும் ஸ்ரீராமர் புகழ் அன்றோ
மரத்தின் புகழ் அதன் வேருக்கு  அன்றோ
அன்பர்க்கு அன்பன் அடியோர்க்கு அடியன்
பளிங்கு மனத்தில் துளி மாசற்ற எளியன்
நினைத்தாலே தித்திக்கும் திகட்டாத இனியன்
கருணை மணம்பரப்பும் செந்தாமரை விழியன்
ஸ்ரீராமரெனும் பெயர் கொண்ட ஆனந்த ஊற்று
அத்தங்கத் தலைவருக்கு இங்குண்டோ மாற்று
நம் தலைவர் புகழை இவ்வுலகெங்கும் பரப்பிட
அவர் பண்பின் சிறப்புகளை மக்கள் மனதில் நிரப்பிட
எனையும் உனைப்போல் நல்பக்தனாய் மாற்றிடு
ராமபக்தியெனும் நல்லமுதை என் இதயத்தில் ஊற்றிடு
அஞ்ஞானங்கள் அகற்றி எனை ஞானியாய் தேற்றிடு
ராமர் புகழ் பரப்புவதில் உன் இளையவனாய் ஏற்றிடு
அடியேன் பணிகிறேன் உன் பாதம்  தொழுகிறேன்
இன்னொரு இமயமே உன் கால்களில் விழுகிறேன்
இவ்வுலகம் எனையும் உனைப் போல கொள்ளட்டும்
இன்னொரு  அனுமன் இவனென்று சொல்லட்டும்
ஸ்ரீராமருக்காய் மலைசுமந்த உன் தோளுக்கு வணக்கம்
வெண்கல மணியணிந்த உன் வாலுக்கு  வணக்கம்
ஸ்ரீராமர்புகழ் பாட நீ மீட்டும் யாழுக்கு  வணக்கம்
உன்னையே தாங்கி நிற்கும் உன் காலுக்கு வணக்கம்
ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஜெய் ராம்
ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஜெய் ராம்
ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஜெய் ராம்
ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஜெய் ராம்


Click here to download the app to listen to this and rest of the slokas

Wednesday, 9 August 2017

Sri Hanumath Pancharathnam

https://play.google.com/store/apps/details?id=com.myappbuffet.SriHanumaan


வீதாகில விஷயேச்சம் ஜாதாநந்தாச்ரு - புலகம்
அத்யச்சம்'
ஸீதாபதி தூதாத்யம் வாதாத்மஜம் - அத்ய பாவயே
ஹ்ருத்யம்''
தருணாருண முக-கமலம் கருணாரஸ-பூர-
பூரிதாபாங்கம்'
ஸஞ்ஜீவநம் ஆசாஸ மஞ்ஜீல-மஹிமாநம் அஞ்சனா-
பாக்யம்''
சம்பர-வைரி-சராதிகம் அம்புஜ-தல-விபுல-
லோசநோதாரம்'
கம்பு-கலம்-அநில-திஷ்டம் பிம்ப ஜ்வலிதோஷ்டம்-ஏகம்
அவலம்பே''
தூரீக்ருத-ஸீதார்த்தி:ப்ரகடி-க்ருத-ராம-வைபவ-
ஸ்பூர்த்தி:
தாரித-தசமுக-கீர்த்தி: புரதோ மம பாது ஹநூமதோ
மூர்த்தி:''
வாநர-நிகராத்யக் ஷம் தாநவ-குல-குமுத-ரவி-கர-
ஸத்ருக்க்ஷம்'
தீந-ஜநாவந-தீக்க்ஷம் பவந-தப: பாக  புஞ்ஜம்-
அத்ராக்க்ஷம்''
ஏதத் பவந  ஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய: படதி
பஞ்சரத்நாக்யம்'
சிரமிஷநிகிலாந் போகாந் புங்த்வா ஸ்ர்ரீராம பக்திபாக்
பவதி''                                              

- ஆதி சங்கர பகவத்பாதாள்

In English
Veethakhila vishayecham, Jathanandaasru pulakamathyacham,
Seethapathi dhoothakhyam,Vathathmajamadhya bhavaye hrudhyam., 1

Tharunaruna Muka kamalam, karuna rasa poora poorithapangam,
Saajeevanamaasase manjula mahimana manjana Bhagyam., 2

Sambhara vairi saradhigamambudala vipula lochanadhaaram,
Kambu gala niladishtam bimba jwalithoshta mekamalambhe 3

Dhoorikrutha seetharthi, prakati krutha rama vaibhava spohoorthi,
Daritha dasa mukha keerthi, puratho mama bhathu Hanumatho Murthy., 4

Vanara nikaradhyaksham, dhanava kula kumudha ravikara sadruksham,
Dheena janavana dheeksham pavana paka ambuja madraksham., 5

Ethath pavana suthasya stotram,
Ya patathi pancha rathnakhyam,
Chiramiha nikhilan bhogan bhukthwa,
Sri Rama Bhakthiman Bhavathi.

Listen to and read this & other slokas of Sri Hanuman - Download the app here

Wednesday, 26 July 2017

Sri Lakshmi Narasimhar - The ultimate protection!



One of the 10 incarnations of Lord Vishnu, is  known for instantly protecting his devotees particularly when they are in danger and sorrow. Unlike other avatars where each one is born, grow up and kill the asura, he appeared instantly and killed Hiranya Kaship to protect, save and bless Prahaladha. It is the significance of devotion of Lord Narasimha. Also, known for the extent of Gnana and ultimate divinity in countering the vicious and tricky boon got obtained by Hiranya.

Hiranya got a boon where by it was almost impossible to kill him. The legend goes like this - Hiranya was very clever in obtaining a boon that he can be killed only
by a living being who is neither human nor animal
by a weapon which is neither a living thing nor a non living thing
at a point of time which is neither a day nor a night
at a place which is neither inside (aham), nor outside (puram)
at a state which is neither on ground nor in the sky

Lord was kind enough to answer Prahaladha’s prayer and instantly appeared before and killed Hiranya by countering all the factors of the boon assuming half human - half animal with a Lion’s head, using his nails as a weapon, at a time exactly in between day and night (Andhi), at exactly the entrance door of the Hiranya’s palace and by keeping him on his laps (neither on the ground nor in the sky).

It is the vindication of ultimate power of Paramathma. Lord Narasimha is extremely ferocious (ugra murthy) and at the same time extremely kind towards his true devotees - it is very clearly seen from Hiranya and Prahalada’s stories

This app is a collection of important slokas for Lord Sri Lakshmi Narasimhar. Each one has its own benefits when chanted or listened to properly.


Click here to download the app 

Thursday, 20 July 2017

A simple exercise for your brain!



Try this new app called RIGHT SWIPE which helps you to focus and concentrate..
Its a simple exercise for your brain. Its fun, its useful, it is refreshing..& Its FREE
It is for all ages...
Try it! You will feel the difference!
Apple devices - download it here 

Android devices - download it here


Tuesday, 18 July 2017

கணபதி ஹ்ருதயம் - காரிய சித்தி ஸ்லோகம்



சிந்தூராபம் த்ரிணேத்ரம் ப்ருதுதரஜடராம் ரத்த வஸ்த்ரா வ்ருதம் தம்
பாசம் சைவாங்குசம் வை ரதநமபயதம் பாலூபி: ஸந்த தந்தம்
ஸித்யா புத்யா ப்ரச்லிஷ்டம் கஜவதநமஹம் சிந்தயே ஹ்யேக தந்தம்
நாளா பூஷாபிராமம் நிஜஜந ஷூகதம் நாபிசேஷம் கணேசம்

அஸ்ய ஸ்ரீ கணேச ஹ்ருதய ஸ்தோத்ர மந்த்ரஸ்ய சம்பு: ருஷி:
நாநாவிதாநி சந்தாம்ஸி ஸ்ரீ கணேசோ தேவதா! கம் - பீஜம், ஞானாத்மிகா
சக்தி: நாத: - கீலகம் கணேச பிரஸாத  ஸித்யர்த்தே ஜபே விநியோக

கணேசம் ஏக தந்தம் ச சிந்தாமணி  விநாயகம்  
டுண்டிராஜம் மயூரேசம் லம்போதர  கஜாநநௌ 
ஹேரம்பம் வக்ரதுண்டம் ச ஜ்யேஷ்ட ராஜம் நிஜஸித்திதம் 
ஆசாபூரம் து வரதம் விகடம் தரணீதரம் 
ஸித்தி புத்தி பதிம் வந்தே ப்ரும்ஹணஸ்பதி ஸம்ஞ்சிதம் 
மாங்கல்யேசம் சர்வ பூஜ்யம் விக்னானாம் நாயகம் பரம் 
ஏகத் விம்சநி நாமாநி கணேசஸ்ய மஹாத்மன:
அர்தேந  ஸம்புதாநிசேத் ஹ்ருதயம் பரிகீர்த்திதம் 


Wednesday, 12 July 2017

Sri Hanumaan app

https://play.google.com/store/apps/details?id=com.myappbuffet.SriHanumaan

All major slokas and mantras are available as text and audio. Text is available in both English and Tamil.

Download the app here

Monday, 3 July 2017

Right Swipe on Apple devices






















Right Swipe is a small interesting game to test your focus and concentration. All you have to do is swipe the ball in the middle of the screen in the direction (top / left / bottom / right ) direction in which the colour of the ball is same as that of the wall. You should focus on the four walls and ignore the other blinking walls. The test is only for 30 seconds. You can view your previous best score and see if you are improving. A simple time pass exercise for your brain. 

Download & Play Now!










Monday, 26 June 2017

ஸ்ரீ ஹனுமான் மகிமை

https://play.google.com/store/apps/details?id=com.myappbuffet.SriHanuman


ஸ்ரீ ஹனுமன்

சிவ அம்சமாக தோன்றி ஸ்ரீ ராமனின் தூதுவராக சேவை செய்தவர். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் விஷ்ணுவையும் ஒரு சேர வழிபட்டதின் பலன். மிக எளிமையாக ராம நாமம் மட்டுமே கூறி வழிபடலாம். ராம நாமம் சொல்பவர்களை கண்டு உருகி அவர்களுக்கு நல் வாழ்வு அளிப்பவர். அவரின் ஆற்றல், புத்தி கூர்மை, அறிவு, போன்றவை ராமாயண காவியம் முழுவதும் பல நிகழ்ச்சிகளால் பரவலாக அறியப்படுகிறது. ராம நாமம் மற்றும் ராம சேவை மட்டுமே தன் அடையாளங்களாக ஆக்கிக்கொண்டார். எவ்வள்வு ஆற்றல் மற்றும் அறிவைப் பெற்றிருந்தாலும் அடக்கமாக யோக நிலையில் அமர்ந்திருப்பது அவர் சிறப்பு.

மனித மனம் என்பது ஒரு குரங்கு. ஆடும்போது அதன் ஆற்றல் வெளிப்படுவதில்லை. மனம் அடங்கி அமைதியாக ஒடுங்கும் போது அதன் அளவற்ற ஆற்றல், சக்தி உணரப்படும். செயற்கரிய கடினமான செயலும் சாத்தியமாகும். மனம் அடங்காமல் ஆடும் வரை இது அறியப்படாமலே இருக்கும். இதை அழகாக உணர்த்துவதே ஸ்ரீ ஆஞ்சநேயரின் வடிவம். அவர் பலம் அவருக்கே தெரியாது என்று சான்றோர் சொல்வதின் அர்த்தம் இது தான். அவர் அமைதியாக ராம நாமம் சொல்லி, ராம சேவை மட்டுமே வாழ்வாக கொண்டு, புலனடக்கி, இதை நம் போன்ற எளியோர்க்கு புரியவைத்தார். இதன் மூலம் சிரஞ்சீவியாக நம்மிடையே இருக்கிறார். புத்தி கூர்மையால் என்ன சொல்ல வேண்டுமோ அதை மட்டும் இரத்தின சுருக்கமாக சொல்லி, கேட்பவர் அறியவேண்டிய விஷயத்தை சட்டென்று உணர்த்தி ஸ்ரீ ராமபிரானுக்கு நிம்மதி தந்து சொல்லின் செல்வர் என்று பெயர் பெற்றவர். சொல்லின் செல்வர் என்றால் இன்னும் ஒரு பொருளும் உண்டு. எங்கெங்கு ராம நாமம் சொல்லப்படுகிறதோ அங்கங்கு செல்வார் என்பதும் அதற்கு அர்த்தம். அதாவது ராம நாமம் 'சொல்லின் (அங்கு) செல்வர்' என்று பொருள். சனி தோஷம் நீங்கவும், துன்பங்களிலிருந்து விடுபடவும் (அன்னை சீதையின் துன்பங்களையே நீக்க உதவியவர்), செயற்கரிய செயல்களை செய்யவும் ஸ்ரீ ஹனுமன் வழிபாடு உதவும்.  ஸ்ரீ ஹனுமன் ஸ்லோகங்களை தொகுத்து ஒலி மற்றும் எழுத்து வடிவில் அவர் பாதங்களை வணங்கி கொடுத்துள்ளோம், இது உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்!

ராம்! ராம்! ராம்!

ராம்! ராம்! ராம்!


ஸ்ரீ ஹனுமானின் முக்கிய ஸ்லோகங்களும் ஸ்தோத்திரங்களும் கேட்கவும் படிக்கவும் (ஒலி மற்றும் எழுத்து வடிவில்) Mobile App ஆக இங்கே பெறலாம்   








Sunday, 25 June 2017

Sri Hanuman

https://play.google.com/store/apps/details?id=com.myappbuffet.SriHanuman&hl=en


Sri Hanuman,

He was born as Rudra hamsa (manifestation of Lord Shiva) and was known as an ardent devotee & servant of Lord Rama (Vishnu).  Sri Hanuman devotion is considered as worshipping both Lord Shiva and Lord Vishnu. He created his own identity as a servant of Lord Rama and as one who lived for Rama nama. Nothing else is significant in Sri Hanuman except Rama nama!

A person's mind is like a monkey.  It jumps from place to place and is always restless.  But when the mind calms down and meditates it can realize its true potential which is very huge. Unless it calms down it cannot even realize this truth. The form of Sri Hanuman just teaches this truth.  Sri Hanuman is often referred as one who did not know his true potential but he was able to achieve unimaginable and impossible things by Rama nama and meditation (yoga).  Whoever utters Rama nama is instantly liked by Sri Hanuman. He immediately blesses them.  Worshiping Sri Hanuman helps a person to achieve great deeds which are otherwise impossible. He gives us calm mind; ability to learn & ability achieve great things. He relieves us off the difficulties we face due to Sani thosham.  We have collected some Hanuman slokas and offered them in text and audio forms.  At his feet, we pray and offer this app hoping it will be useful for you!

Ram! Ram! Ram!
Ram! Ram! Ram!

This app has all the major slokas and mantras in text and audio forms - in both English and Tamil languages



You can download the app here


ஆஷாட நவராத்திரி - ஸ்ரீ வாராஹி ஸித்தி அர்ச்சனை -

https://play.google.com/store/apps/details?id=com.myappbuffet.srivarahi

இந்த வாராஹி ஸித்தி அர்ச்சனையை வாராஹி  உபாசகர்கள் தங்கள் பூஜையில் உபயோகிக்கலாம். அர்ச்சிக்க சிவப்பு மலர்கள் (உதாரணமாக செவ்வரளி) பயன்படுத்துவது சிறப்பு. பூக்களை ரக்த சந்தனத்தில் தோய்த்து அர்ச்சிப்பது மிகவும் சிறந்தது. கிடைக்காத நிலையில் சிவப்பு குங்குமத்தில் தோய்த்தும் அர்ச்சிக்கலாம். செம்மாதுளை முத்துக்களால் அர்ச்சித்தால், நவகிரஹ தோஷமும், குறிப்பாக செவ்வாய் தோஷமும் விலகும். சம்பத் அபிவிருத்தியாகும்.


ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ பகவத்யை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ வார்த்தாள்யை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ வாராஹ்யை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ வாராஹமுக்யை நமோ நம    5

ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ ருந்தே ருந்தின்யை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ ஜம்பே ஜம்பினயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ மோஹே மோஹிம்யை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ ஸ்தம்பே ஸ்தம்பின்யை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ ஸர்வ துஷ்ட நிவாரிண்யை நமோ நம    10

ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ ஸர்வ பிரதுஷ்ட நிவாரிண்யை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ ஸர்வ சாஸ்திர வித்யாயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ அசேஷஜன சேவிதாயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ அதிய கார்யசித்திதாயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ வாக் விலாசின்யை நமோ நம    15

ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ சத்ருவாக் ஸ்தம்பின்யை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ நித்ய வைபவாயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ நித்ய சந்தோஷின்யை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ பஞ்சமி திதி ரூபிண்யை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ பஞ்சமி சித்தி தேவ்யை நமோ நம         20

ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ மணிமகுட பூஷணாயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ மணிமண்டப வாசின்யை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ ரத்த மாம்ஸ ப்ரியாயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ ரக்த மால்யாம்பரதராயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ கபால ஹஸ்த வாமாயை நமோ நம     25

ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ கபாலி ப்ரிய தண்டின்யை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ அச்வாரூடாம்பிகாயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ அச்வமந்த்ர அதிஷ்டாயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ தண்ட நாயகி திவ்யாயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ தண்டினி தக்ஷிணி தருணாயை நமோ நம     30

ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ நித்ய செளபாக்ய செளந்தர்யாயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ நித்யா நித்ய நிர்மலாயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ நித்ய வைபவ வாராஹ்யை நமோ நம     33



ஓம் ஸ்ரீ வராஹி தாயே போற்றி!

ஸ்ரீ வாராஹி அம்பிகையின் முக்கிய ஸ்லோகங்களும் ஸ்தோத்திரங்களும் கேட்கவும் படிக்கவும் (ஒலி மற்றும் எழுத்து வடிவில்) Mobile App ஆக இங்கே பெறலாம்   






Wednesday, 21 June 2017

ஆஷாட நவராத்திரி விழா 2017



தஞ்சை பெரிய கோவிலில் உள்ள ஸ்ரீ வாராஹி அம்மன் சந்நிதியில் இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா 23/6/2017 முதல் 03/07/2017 வரை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆஷாட நவராத்திரி ஸ்ரீ வராஹி அம்மனுக்கு மிகவும் விசேஷமான பண்டிகை ஆகும். வித விதவிதமான அலங்காரங்களுடன் ஒவ்வொரு  நாளும் அம்பிகையை தரிசிக்கலாம். மாமன்னன் ராஜ ராஜ சோழன் ஒவ்வொரு முறை போருக்கு செல்லும்போதும் ஸ்ரீ வாராஹி அம்பிகைக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து வணங்கிவிட்டுத் தான் செல்வான் என்று வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. அவன் பெற்ற வெற்றிகள் பற்றி நாம் பேசவும் வேண்டுமோ!  ஸ்ரீ வாராஹி அம்பிகை அவ்வளவு கருணையுள்ள வரப்பிரசாதி - எதிரிகளை நீக்கி வெற்றிகளை தருபவள்!

இந்த ஆஷாட நவராத்திரி காலத்தில் அம்பிகையை வணங்கி மகிழ்வோம்

ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி!

ஸ்ரீ வாராஹி அம்பிகையின் முக்கிய ஸ்லோகங்களும் ஸ்தோத்திரங்களும் கேட்கவும் படிக்கவும் (ஒலி மற்றும் எழுத்து வடிவில்) Mobile App ஆக இங்கே பெறலாம்   







Monday, 19 June 2017

Coming soon - Sree Hanuman!

We are launching our next free devotional app - Sree Hanuman, in a few days!

https://play.google.com/store/apps/developer?id=App_buffet2017

Sunday, 11 June 2017

ஸ்வர்ணாகர்ஷண பைரவர் பன்னிரு நாமாக்கள்

https://play.google.com/store/apps/details?id=com.myappbuffet.SriBhairavar


ஸ்வர்ணப்ரத என்று தொடங்கும் பன்னிரண்டு நாமாக்களால் பூஜிக்கின்றவனுக்கு ஸ்ரீ பைரவர் பொற் குவியலை அருள்வார் என்று சாஸ்திரமறிந்த பெரியோர் கூறுவர். அந்த பன்னிரண்டு நாமாக்கள்:

ஒம் ஸ்வர்ணப்ரதாய நம:
ஒம் ஸ்வர்ணவர்ஷீ நம:
ஒம் ஸ்வர்ணாகர்ஷணபைரவ நம:
ஒம் பக்தப்ரிய நம:
ஒம் பக்த வச்ய நம:
ஒம் பக்தா பீஷ்ட பலப்ரத நம:
ஒம் ஸித்தித நம:
ஒம் கருணாமூர்த்தி நம:
ஒம் பக்தாபீஷ்ட ப்ரபூரக நம:
ஒம் நிதிஸித்திப்ரத நம:
ஒம் ஸ்வர்ணா ஸித்தித நம:
ஒம் ரசஸித்தித நம:


Click here to download the app



Saturday, 10 June 2017

Brain Games - II

https://play.google.com/store/apps/details?id=com.myappbuffet.bosie_wrong_un&hl=en


A fun filled 'find the odd one out' game for all ages. Carefully selected custom made images to test your concentration and focus. Two modes are available - Relaxed mode and Challenge mode. This game has a specially designed scoring system which factors the failed attempts into scoring. This system encourages you to minimise the mistakes and helps to go for the correct ‘one’ more carefully. Try this FREE app and play with your family

Click here to download the game

Tuesday, 6 June 2017

ஸ்ரீ வராஹி மகிமை



ஸ்ரீ சக்தி வழிபாட்டில், ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மிக முக்கியமான இடம் உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சப்த மாதர்களில் ஒருவர்! சிறந்த வரப்பிரசாதி! அம்பிகையின் நால்வகைப் படைகளுக்கும் சேனாதிபதியாகத் திகழ்பவள். அபிராமி அந்தாதியிலும் வாராஹி அம்பாள் பற்றிய குறிப்புகள்  உண்டு. எதிரிகள் ஆபத்திலிருந்தும், பிற பயங்களிலிருந்தும், மற்ற கெடுதல்களிலிருந்தும் பக்தர்களை காப்பாற்றுபவள்.எவ்வளவு கொடிய அச்சுறுத்தும் எதிரிகளாயிருந்தாலும், ஸ்ரீ வாராஹி பக்தர்களை பார்த்தால் பூ போல் புன்னகைத்து அவர்கள் வழியிலிருந்தே விலகி போய்விடுவார்கள் என்பது உண்மை. அப்படி அற்புதமாய் தன் பக்தர்களை காப்பவள்.



ஸ்ரீ வாராஹி அம்மன் வழிபாட்டில் முக்கியமாக கருதப்படும் ஸ்லோகங்களையும், மந்திரங்களையும், இயன்றவரை சேகரித்து தொகுத்துள்ளோம். படிக்கவும், கேட்கவும் ஏற்ப ஒலி மற்றும் எழுத்து வடிவில் சமர்ப்பிக்கிறோம். இதன் நோக்கம், ஸ்ரீ வராஹி பக்தர்கள் ஒரே இடத்தில தாயின் அனைத்து ஸ்லோகங்களையும் மந்திரங்களையும் எளிதில் பார்க்கவும் கேட்கவும் செய்விப்பதே - அதை இயன்றவரை செய்துள்ளோம். இன்னும் விடுபட்டவை ஏராளம் இருக்கலாம். தொடர்ந்து முயற்சி செய்து இன்னும் சேர்ப்போம். குறைகள், தவறுகள் இருந்தால் மன்னிக்கவும். அன்னையின் பொற்பாத கமலங்களை வணங்கி சமர்ப்பிக்கிறோம்.


Sunday, 28 May 2017

Sri Sarabeswarar App

https://play.google.com/store/apps/details?id=com.myappbuffet.srisarabeswarar



ஸ்ரீ சரபேஸ்வரர் வழிபாடு , சிவன் வழிபாட்டில் மிக முக்கியமாக கருதப்படுகிறது . சிவனின் மிக சக்திவாய்ந்த ஸ்வரூபமாக வணங்கப்படுகிறது . ஹிரண்யனின் வதம் முடிந்தபிறகும் ஆக்ரோஷமான கோபம் அடங்காத நிலையில் , ஸ்ரீ நரசிம்மரின் கோபத்தை தனித்து அவரை சாந்தப்படுத்த பரமசிவன் கொண்ட ரூபமே ஸ்ரீ சரபேஸ்வரர். இரண்டு இறக்கைகளும் எட்டு கால்களும் , கருடனின் அலகும் , நான்கு கைகளும் , கூறிய நகங்களும் கொண்ட ஸ்ரீ சரபேஸ்வரர் ஸ்ரீ நரசிம்மரை சாந்தப்படுத்தினார். சக்தி வடிவமான ஸ்ரீ சூலினி துர்காவும் , ஸ்ரீ ப்ரித்யங்கரா தேவியும் அவரின் இரு இறக்கைகளாக வந்து அவருக்கு உறுதுனையாக இருந்தனர். ஸ்ரீ நரசிம்மர் குளிர்ந்து சாந்தமானதும் அவரை போற்றி பாடியவையே ஸ்ரீ சரபேஸ்வரர் அஷ்தோத்திரம். மொத்த பிரபஞ்சமே நிம்மதி பெருமூச்சு விட்டது. ஸ்ரீ சரபேஸ்வரர் ரூபம் கொண்டு வந்த தானும் ஸ்ரீ நரசிம்மரும் வேறு வேறு அல்ல, ஒருவரே என்று பரமசிவன் பின்னர் கூறினார். மேலும் , தண்ணீரும் தண்ணீரும் போல, நெய்யும் நெய்யும் போல தாங்கள் இருவரும் ஒன்றே என உரைத்தார்.

பிரபஞ்ச அமைதிக்காவும் இயற்கை சீரழிவிலிருந்து பூமியை காக்கவும் ஸ்ரீ சரபேஸ்வரர் வழிபாடு இன்றியமையாதது. மக்களின் எவ்வளவோ துன்பங்களை போக்கி நல்வாழ்வு தரும் ஸ்ரீ சரபேஸ்வரரின் ஸ்லோகங்கள் , மந்திரங்கள் மற்றும் ஸ்தோத்திரங்கள் சேகரித்து ஒலி மற்றும் எழுத்து வடிவத்தில் ஸ்ரீ சரபேஸ்வர , ஸ்ரீ சூலினி துர்கா, ஸ்ரீ ப்ரித்யங்கரா தேவி ஆகிய மூவரையும் வணங்கி அவர்களின் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம். பக்தர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.


DOWNLOAD THE APP HERE

Friday, 26 May 2017

Kids activity app

PICK N FIT

A simple activity app for the kids of age 2yrs and above. It has simple drag and drop exercises for the little ones. Based on shapes, colours and objects, kids will visually connect the 2 matching shapes and join them by dragging & dropping. It helps to grow the reasoning ability. Has 12 levels to keep them happily engaged.

GET THE APP HERE

 

Tuesday, 23 May 2017

SKY BOLT - A SPACE GAME

SKY BOLT 2.0


A simple fun filled time passing game for all ages. Move your space ships and dodge the enemies coming in your direction as you travel. Just swipe (left/right/top/down) and escape from enemies. Colourful space ships come in your way as enemies. Just dodge them and sustain your flight in the sky. Collect gold coins as you move along. The game ends when your space ship collide with one of your enemies. Oh, by the way, this is also a free app!
 
Download the game here

Brain Games - I

Brain Games series:

App buffet proudly launches brain games series, a collection of interesting brain games.

Right Swipe is a small interesting game to test your focus and concentration. All you have to do is swipe the ball in the middle of the screen in the direction (top / left / bottom / right ) direction in which the color of the ball is same as that of the wall. You should focus on the four walls and ignore the other blinking walls. The test is only for 30 seconds. You can view your previous best score and see if you are improving. A simple time pass exercise for your brain. Play Now!



Monday, 15 May 2017

Devotional Apps

App Buffet offers a set of devotional apps in TAMIL to give you the convenience of praying any time, any where. Each app is a collection of sacred hymns (slokas) pertaining to a specific deity only. If you are an ardent devotee of a specific God/Goddess (Ishta Devatha), you can download just that app which offers the collection of sacred hymns. Also, we have carefully collected major slokas which may not be available in conventional audio releases in the market and offered them in text and audio formats. What more? All the apps are FREE APPS, We have collected some rare slokas which are not available easily & offered them.

At your convenient time, just open the app, read the text or listen to the slokas and do your prayers.

Following devotional apps are available for download on GOOGLE PLAY

Abhirami Andhadhi Urai

Sri Varahi

Sri Bhairavar


Follow us to get updates on future releases. Yes, the list of devotional apps is growing and you can look forward to more deities.


Thursday, 11 May 2017

ஸ்வர்ணாகர்ஷண பைரவர் பௌர்ணமி வழிபாடு



வறுமை நீங்கி பொருளாதார வாழ்வு மேம்பட பௌர்ணமி இரவு சொல்லி பூஜை செய்யவேண்டிய ஸ்வர்ணாகர்ஷண பைரவர் ஸ்லோகங்களும் ஸ்தோத்திரங்களும்

ஒவொரு பௌர்ணமி இரவு 7 மணிக்கும், கீழே குறிப்பிட்டுள்ள ஸ்லோகங்களையும் ஸ்தோத்திரங்களையும் சொல்லி வருவதனால் வறுமை நீங்கி பொருளாதார வாழ்வு முன்னேற்றம் அடையும்.

ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் காயத்ரீ - 9 முறை
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் - 18 முறை
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவ அர்ச்சனை - 1 முறை
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூல மந்திரம் - 3 முறை
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் பன்னிரு நாமாக்கள் - 3முறை


குறிப்பாக, 'ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் பன்னிரு நாமாக்கள்' ஒவ்வொரு   பௌர்ணமிக்கும், விடாமல், தொடர்ச்சியாக  சொல்லி வந்தால், ஸ்வர்ண பைரவர் பொற் குவியலை தருவார் என்பது ஆன்றோர் வாக்கு .

இவை அனைத்தும் படிக்கவும், ஒலி வடிவில் கேட்கவும் எளிதாக கீழே உள்ள மொபைல் ஆப்பில் வழங்கி உள்ளோம்




Download Bhairavar App here

Friday, 5 May 2017

ஸ்ரீ வராஹி பன்னிரு நாமாக்கள்



ஸ்ரீ வராஹி பன்னிரு நாமாக்கள்

எந்த மந்திரங்களையும் ஸ்லோகங்களையும் கடினமாக மனனம் செய்யாமல், சுலபமாக இந்த 12 நாமங்களையும் சொன்னாலே போதும். சொல்பவர்கள் சகல ஆபத்துகளிலிருந்து காப்பாற்றப்படுகிறார்கள் என்பது ஸ்ரீ வராஹி அம்மனை துதிப்போர் மற்றும் சான்றோர் அறிந்த உண்மை. எளிமையாக மனதில் ஞாபகம் வைத்துக்கொள்ளக்கூடிய இந்த பன்னிரு நாமங்கள் பின்வருமாறு

பஞ்சமீ
தண்டநாதா
ஸங்கேதா
சமயேஸ்வரி
ஸமய ஸங்கேதா
வாராஹி
போத்ரிணீ
ஸிவா
வார்த்தாளீ
மஹா ஸேநா
ஆஜ்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ

இந்த அவசர உலகத்தில் மிக குறைந்த நேரத்தில் சட்டென்று இந்த நாமங்களை கூறி, அம்பிகையை வழிபட்டு
அருள் பெறலாம்.



Sri Varahi app can be downloaded here


ஸ்ரீ வராஹி வழிபாடு


ஸ்ரீ சக்தி வழிபாட்டில், ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மிக முக்கியமான இடம் உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சப்த மாதர்களில் ஒருவர்! சிறந்த வரப்பிரசாதி! அம்பிகையின் நால்வகைப் படைகளுக்கும் சேனாதிபதியாகத் திகழ்பவள். அபிராமி அந்தாதியிலும் வாராஹி அம்பாள் பற்றிய குறிப்புகள்  உண்டு. எதிரிகள் ஆபத்திலிருந்தும், பிற பயங்களிலிருந்தும், மற்ற கெடுதல்களிலிருந்தும் பக்தர்களை காப்பாற்றுபவள்.எவ்வளவு கொடிய அச்சுறுத்தும் எதிரிகளாயிருந்தாலும், ஸ்ரீ வாராஹி பக்தர்களை பார்த்தால் பூ போல் புன்னகைத்து அவர்கள் வழியிலிருந்தே விலகி போய்விடுவார்கள் என்பது உண்மை. அப்படி அற்புதமாய் தன் பக்தர்களை காப்பவள்.



ஸ்ரீ வாராஹி அம்மன் வழிபாட்டில் முக்கியமாக கருதப்படும் ஸ்லோகங்களையும், மந்திரங்களையும், இயன்றவரை சேகரித்து தொகுத்துள்ளோம். படிக்கவும், கேட்கவும் ஏற்ப ஒலி மற்றும் எழுத்து வடிவில் சமர்ப்பிக்கிறோம். இதன் நோக்கம், ஸ்ரீ வராஹி பக்தர்கள் ஒரே இடத்தில தாயின் அனைத்து ஸ்லோகங்களையும் மந்திரங்களையும் எளிதில் பார்க்கவும் கேட்கவும் செய்விப்பதே - அதை இயன்றவரை செய்துள்ளோம். இன்னும் விடுபட்டவை ஏராளம் இருக்கலாம். தொடர்ந்து முயற்சி செய்து இன்னும் சேர்ப்போம். குறைகள், தவறுகள் இருந்தால் மன்னிக்கவும். அன்னையின் பொற்பாத கமலங்களை வணங்கி சமர்ப்பிக்கிறோம்.