ஸ்ரீ சரபேஸ்வரர் வழிபாடு , சிவன் வழிபாட்டில் மிக முக்கியமாக கருதப்படுகிறது . சிவனின் மிக சக்திவாய்ந்த ஸ்வரூபமாக வணங்கப்படுகிறது . ஹிரண்யனின் வதம் முடிந்தபிறகும் ஆக்ரோஷமான கோபம் அடங்காத நிலையில் , ஸ்ரீ நரசிம்மரின் கோபத்தை தனித்து அவரை சாந்தப்படுத்த பரமசிவன் கொண்ட ரூபமே ஸ்ரீ சரபேஸ்வரர். இரண்டு இறக்கைகளும் எட்டு கால்களும் , கருடனின் அலகும் , நான்கு கைகளும் , கூறிய நகங்களும் கொண்ட ஸ்ரீ சரபேஸ்வரர் ஸ்ரீ நரசிம்மரை சாந்தப்படுத்தினார். சக்தி வடிவமான ஸ்ரீ சூலினி துர்காவும் , ஸ்ரீ ப்ரித்யங்கரா தேவியும் அவரின் இரு இறக்கைகளாக வந்து அவருக்கு உறுதுனையாக இருந்தனர். ஸ்ரீ நரசிம்மர் குளிர்ந்து சாந்தமானதும் அவரை போற்றி பாடியவையே ஸ்ரீ சரபேஸ்வரர் அஷ்தோத்திரம். மொத்த பிரபஞ்சமே நிம்மதி பெருமூச்சு விட்டது. ஸ்ரீ சரபேஸ்வரர் ரூபம் கொண்டு வந்த தானும் ஸ்ரீ நரசிம்மரும் வேறு வேறு அல்ல, ஒருவரே என்று பரமசிவன் பின்னர் கூறினார். மேலும் , தண்ணீரும் தண்ணீரும் போல, நெய்யும் நெய்யும் போல தாங்கள் இருவரும் ஒன்றே என உரைத்தார்.
பிரபஞ்ச அமைதிக்காவும் இயற்கை சீரழிவிலிருந்து பூமியை காக்கவும் ஸ்ரீ சரபேஸ்வரர் வழிபாடு இன்றியமையாதது. மக்களின் எவ்வளவோ துன்பங்களை போக்கி நல்வாழ்வு தரும் ஸ்ரீ சரபேஸ்வரரின் ஸ்லோகங்கள் , மந்திரங்கள் மற்றும் ஸ்தோத்திரங்கள் சேகரித்து ஒலி மற்றும் எழுத்து வடிவத்தில் ஸ்ரீ சரபேஸ்வர , ஸ்ரீ சூலினி துர்கா, ஸ்ரீ ப்ரித்யங்கரா தேவி ஆகிய மூவரையும் வணங்கி அவர்களின் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம். பக்தர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
DOWNLOAD THE APP HERE
No comments:
Post a Comment