Tuesday, 6 June 2017

ஸ்ரீ வராஹி மகிமை



ஸ்ரீ சக்தி வழிபாட்டில், ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மிக முக்கியமான இடம் உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சப்த மாதர்களில் ஒருவர்! சிறந்த வரப்பிரசாதி! அம்பிகையின் நால்வகைப் படைகளுக்கும் சேனாதிபதியாகத் திகழ்பவள். அபிராமி அந்தாதியிலும் வாராஹி அம்பாள் பற்றிய குறிப்புகள்  உண்டு. எதிரிகள் ஆபத்திலிருந்தும், பிற பயங்களிலிருந்தும், மற்ற கெடுதல்களிலிருந்தும் பக்தர்களை காப்பாற்றுபவள்.எவ்வளவு கொடிய அச்சுறுத்தும் எதிரிகளாயிருந்தாலும், ஸ்ரீ வாராஹி பக்தர்களை பார்த்தால் பூ போல் புன்னகைத்து அவர்கள் வழியிலிருந்தே விலகி போய்விடுவார்கள் என்பது உண்மை. அப்படி அற்புதமாய் தன் பக்தர்களை காப்பவள்.



ஸ்ரீ வாராஹி அம்மன் வழிபாட்டில் முக்கியமாக கருதப்படும் ஸ்லோகங்களையும், மந்திரங்களையும், இயன்றவரை சேகரித்து தொகுத்துள்ளோம். படிக்கவும், கேட்கவும் ஏற்ப ஒலி மற்றும் எழுத்து வடிவில் சமர்ப்பிக்கிறோம். இதன் நோக்கம், ஸ்ரீ வராஹி பக்தர்கள் ஒரே இடத்தில தாயின் அனைத்து ஸ்லோகங்களையும் மந்திரங்களையும் எளிதில் பார்க்கவும் கேட்கவும் செய்விப்பதே - அதை இயன்றவரை செய்துள்ளோம். இன்னும் விடுபட்டவை ஏராளம் இருக்கலாம். தொடர்ந்து முயற்சி செய்து இன்னும் சேர்ப்போம். குறைகள், தவறுகள் இருந்தால் மன்னிக்கவும். அன்னையின் பொற்பாத கமலங்களை வணங்கி சமர்ப்பிக்கிறோம்.


No comments:

Post a Comment