தஞ்சை பெரிய கோவிலில் உள்ள ஸ்ரீ வாராஹி அம்மன் சந்நிதியில் இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா 23/6/2017 முதல் 03/07/2017 வரை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆஷாட நவராத்திரி ஸ்ரீ வராஹி அம்மனுக்கு மிகவும் விசேஷமான பண்டிகை ஆகும். வித விதவிதமான அலங்காரங்களுடன் ஒவ்வொரு நாளும் அம்பிகையை தரிசிக்கலாம். மாமன்னன் ராஜ ராஜ சோழன் ஒவ்வொரு முறை போருக்கு செல்லும்போதும் ஸ்ரீ வாராஹி அம்பிகைக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து வணங்கிவிட்டுத் தான் செல்வான் என்று வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. அவன் பெற்ற வெற்றிகள் பற்றி நாம் பேசவும் வேண்டுமோ! ஸ்ரீ வாராஹி அம்பிகை அவ்வளவு கருணையுள்ள வரப்பிரசாதி - எதிரிகளை நீக்கி வெற்றிகளை தருபவள்!
இந்த ஆஷாட நவராத்திரி காலத்தில் அம்பிகையை வணங்கி மகிழ்வோம்
ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி!
ஸ்ரீ வாராஹி அம்பிகையின் முக்கிய ஸ்லோகங்களும் ஸ்தோத்திரங்களும் கேட்கவும் படிக்கவும் (ஒலி மற்றும் எழுத்து வடிவில்) Mobile App ஆக இங்கே பெறலாம்
No comments:
Post a Comment