Friday, 11 August 2017

ஸ்ரீ ஆஞ்சநேயரிடம் விண்ணப்பம்

https://play.google.com/store/apps/details?id=com.myappbuffet.SriHanumaan


அஞ்சனை வயிற்றில் தோன்றிய முத்தே
அகில உலகுக்கும் பக்திக்கு வித்தே
ஸ்ரீராமர் புகழ் உணா்ந்த ஞானி நீயே
என் ராம பக்தி வளர ஏணி நீயே
மலைகளை தூக்கும் ஆற்றல் இருந்தும்
விண்ணை அளக்கும் உருவம் இருந்தும்
ஸ்ரீராமர் முன்னால் நீ குறுகி நிற்கிறாய்
ஸ்ரீராமரின் அன்பால் நீ உருகி நிற்கிறாய்
சொல்லிலும் செயலிலும் உனக்கிணை உண்டோ
ஆகாயத்தை விடவும் அகன்றது  உண்டோ
உன் புகழ் யாவும் ஸ்ரீராமர் புகழ் அன்றோ
மரத்தின் புகழ் அதன் வேருக்கு  அன்றோ
அன்பர்க்கு அன்பன் அடியோர்க்கு அடியன்
பளிங்கு மனத்தில் துளி மாசற்ற எளியன்
நினைத்தாலே தித்திக்கும் திகட்டாத இனியன்
கருணை மணம்பரப்பும் செந்தாமரை விழியன்
ஸ்ரீராமரெனும் பெயர் கொண்ட ஆனந்த ஊற்று
அத்தங்கத் தலைவருக்கு இங்குண்டோ மாற்று
நம் தலைவர் புகழை இவ்வுலகெங்கும் பரப்பிட
அவர் பண்பின் சிறப்புகளை மக்கள் மனதில் நிரப்பிட
எனையும் உனைப்போல் நல்பக்தனாய் மாற்றிடு
ராமபக்தியெனும் நல்லமுதை என் இதயத்தில் ஊற்றிடு
அஞ்ஞானங்கள் அகற்றி எனை ஞானியாய் தேற்றிடு
ராமர் புகழ் பரப்புவதில் உன் இளையவனாய் ஏற்றிடு
அடியேன் பணிகிறேன் உன் பாதம்  தொழுகிறேன்
இன்னொரு இமயமே உன் கால்களில் விழுகிறேன்
இவ்வுலகம் எனையும் உனைப் போல கொள்ளட்டும்
இன்னொரு  அனுமன் இவனென்று சொல்லட்டும்
ஸ்ரீராமருக்காய் மலைசுமந்த உன் தோளுக்கு வணக்கம்
வெண்கல மணியணிந்த உன் வாலுக்கு  வணக்கம்
ஸ்ரீராமர்புகழ் பாட நீ மீட்டும் யாழுக்கு  வணக்கம்
உன்னையே தாங்கி நிற்கும் உன் காலுக்கு வணக்கம்
ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஜெய் ராம்
ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஜெய் ராம்
ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஜெய் ராம்
ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஜெய் ராம்


Click here to download the app to listen to this and rest of the slokas

No comments:

Post a Comment