ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்
ஸ்ரீ விஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒருவர். மற்ற அவதாரங்களை போல் பிறந்து, வளர்ந்து பிறகு அவதார நோக்கமான அசுரனை அழிப்பது போல் அல்லாமல் அவதரித்த உடனே சட்டென்று ஹிரண்யனை வதம் செய்து ப்ரஹலாதனுக்கு அருளியவர். அதே போல் தன்னை நம்பி தஞ்சம் அடைந்த பக்தர்களை உடனே, தாமதிக்காமல் காப்பாற்றி அருளும் கருணை உள்ளம் கொண்டவர்.
உயிர் உள்ள - உயிரற்ற ஆயுதத்தால்
பகலும் இரவும் அல்லாத நேரத்தில்
அகமும் புறமும் அல்லாத இடத்தில்
மேலும் கீழும் அல்லாத நிலையில்
மனிதனும் மிருகமும் அல்லாத ஒருவரால் தான், தன் உயிர் போகவேண்டும் என்ற கடுமையான சிக்கலான வரத்தைப் பெற்ற ஹிரண்யனை, ஸ்ரீ விஷ்ணு -
உயிர் உள்ள - உயிரற்ற ஆயுதத்தால் - தன் கூரிய நகங்களால்
பகலும் இரவும் அல்லாத நேரத்தில் - அந்திப் பொழுதில்
அகமும் புறமும் அல்லாத இடத்தில - வாசலில்
மேலும் கீழும் அல்லாத நிலையில் - தன் மடியில்
சிங்க தலையும் மனித உடலும் கொண்டு ஸ்ரீ நரசிம்மராய் அவதரித்து வதம் செய்தார். வாழ்க்கையில் எவ்வளவு சிக்கலான சூழலும், துன்பங்களும் நேர்ந்தாலும், தன்னை நம்பிய உண்மையான பக்தர்களை அவ்வாறே எளிதில் சட்டென்று சுலபமாக காப்பவர். ஹிரண்யனின் சிக்கலான வரத்தை விடவா நமது துன்பங்கள்? அதையே எளிதில் உடைத்தெறிந்து ப்ரஹலாதனுக்கு அருளிய ஐயன் அன்போடு நம்மையும் அவ்வாறே காப்பாற்றி வழி நடத்துவார். நம்பிக்கையும், உண்மையும், அன்பும் மட்டும் போதும். எந்த சூழலிலும் கைவிடாமல் காப்பார்.
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரின் முக்கியமான ஸ்லோகங்களையும், ஸ்தோத்திரங்களையும் தொகுத்து ஒலி மற்றும் எழுத்து வடிவில் வழங்கி உள்ளோம்.
ஸ்ரீ நரசிம்ம காயத்ரி
ஸ்ரீ நரசிம்ம கவசம்
கராவலம்ப ஸ்தோத்ரம்
ஸ்ரீ நரசிம்ம பிரபத்தி
ஶ்ரீமந்த்ரராஜபத ஸ்தோத்ரம்
ஸ்ரீ நரசிம்ம ருண விமோசன ஸ்தோத்திரம்
ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பஞ்சரத்ன ஸ்தோத்திரம்
ஸ்ரீ நரசிம்ம அஷ்டோத்ர சத நாமாவளி
ஸ்ரீ நரசிம்ம அஷ்டகம்
ஸ்ரீ நரசிம்ம ஸ்துதி
ஸ்ரீ நரசிம்ம நக ஸ்துதி
ஸ்ரீ நரசிம்ம அஷ்டோத்ர சத நாம ஸ்தோத்ரம்
Download the FREE app here
இங்கே பதிவிறக்கம் செய்யலாம்
No comments:
Post a Comment