ஸ்ரீ ஹனுமன்
சிவ அம்சமாக தோன்றி ஸ்ரீ ராமனின் தூதுவராக சேவை செய்தவர். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் விஷ்ணுவையும் ஒரு சேர வழிபட்டதின் பலன். மிக எளிமையாக ராம நாமம் மட்டுமே கூறி வழிபடலாம். ராம நாமம் சொல்பவர்களை கண்டு உருகி அவர்களுக்கு நல் வாழ்வு அளிப்பவர். அவரின் ஆற்றல், புத்தி கூர்மை, அறிவு, போன்றவை ராமாயண காவியம் முழுவதும் பல நிகழ்ச்சிகளால் பரவலாக அறியப்படுகிறது. ராம நாமம் மற்றும் ராம சேவை மட்டுமே தன் அடையாளங்களாக ஆக்கிக்கொண்டார். எவ்வள்வு ஆற்றல் மற்றும் அறிவைப் பெற்றிருந்தாலும் அடக்கமாக யோக நிலையில் அமர்ந்திருப்பது அவர் சிறப்பு.
மனித மனம் என்பது ஒரு குரங்கு. ஆடும்போது அதன் ஆற்றல் வெளிப்படுவதில்லை. மனம் அடங்கி அமைதியாக ஒடுங்கும் போது அதன் அளவற்ற ஆற்றல், சக்தி உணரப்படும். செயற்கரிய கடினமான செயலும் சாத்தியமாகும். மனம் அடங்காமல் ஆடும் வரை இது அறியப்படாமலே இருக்கும். இதை அழகாக உணர்த்துவதே ஸ்ரீ ஆஞ்சநேயரின் வடிவம். அவர் பலம் அவருக்கே தெரியாது என்று சான்றோர் சொல்வதின் அர்த்தம் இது தான். அவர் அமைதியாக ராம நாமம் சொல்லி, ராம சேவை மட்டுமே வாழ்வாக கொண்டு, புலனடக்கி, இதை நம் போன்ற எளியோர்க்கு புரியவைத்தார். இதன் மூலம் சிரஞ்சீவியாக நம்மிடையே இருக்கிறார். புத்தி கூர்மையால் என்ன சொல்ல வேண்டுமோ அதை மட்டும் இரத்தின சுருக்கமாக சொல்லி, கேட்பவர் அறியவேண்டிய விஷயத்தை சட்டென்று உணர்த்தி ஸ்ரீ ராமபிரானுக்கு நிம்மதி தந்து சொல்லின் செல்வர் என்று பெயர் பெற்றவர். சொல்லின் செல்வர் என்றால் இன்னும் ஒரு பொருளும் உண்டு. எங்கெங்கு ராம நாமம் சொல்லப்படுகிறதோ அங்கங்கு செல்வார் என்பதும் அதற்கு அர்த்தம். அதாவது ராம நாமம் 'சொல்லின் (அங்கு) செல்வர்' என்று பொருள். சனி தோஷம் நீங்கவும், துன்பங்களிலிருந்து விடுபடவும் (அன்னை சீதையின் துன்பங்களையே நீக்க உதவியவர்), செயற்கரிய செயல்களை செய்யவும் ஸ்ரீ ஹனுமன் வழிபாடு உதவும். ஸ்ரீ ஹனுமன் ஸ்லோகங்களை தொகுத்து ஒலி மற்றும் எழுத்து வடிவில் அவர் பாதங்களை வணங்கி கொடுத்துள்ளோம், இது உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்!
ராம்! ராம்! ராம்!
ராம்! ராம்! ராம்!
ஸ்ரீ ஹனுமானின் முக்கிய ஸ்லோகங்களும் ஸ்தோத்திரங்களும் கேட்கவும் படிக்கவும் (ஒலி மற்றும் எழுத்து வடிவில்) Mobile App ஆக இங்கே பெறலாம்